கருங்காட்டு எல்லையில் 15 வயது காணும் ஒரு கலங்கரை விளக்கம்


Photo பச்சை மலைச்சாரலும் கருமையான ஊசியிலைக் காடுகளும் விறைக்கும் பனிக்குளிரும் நிறைந்த யேர்மன்-சுவிஸ் எல்லைப்புற நகரங்களில் தம் பெற்றோர், உற்றார், உறவுகள், நண்பர்களைப் பிhpந்து புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க மக்கள் தமக்கு தாய் மொழியில் தமது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாமலுள்ளதே என்ற ஏக்கம் பல நாட்களாக இருந்து வந்தது.

யேர்மன் ஒஸ்நாபுறுக் மறைமாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு இயக்குனர் கலாநிதி ஜெயசேகரம் அவர்களின் பொறுப்பில் 02.02.1988இல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேளையில் ஏறக்குறைய 10 தமிழ் பங்குகளே யேர்மனி முழுவதும் நிறுவப்பட்டிருந்தன. அந்நாட்களில் தமது கலாநிதிப் பட்டத்தை உரோமையில் பெற்று ஐரோப்பிய புலம்பெயர் தமிழ் மக்களுக்காக தமது பணிகளை சுறுசுறுப்புடன் முறுக்கி விட்டிருந்த கலாநிதி ஜெயசேகரம் அவர்களின் கண்களில் கருங்காட்டின் பல கிராமங்களிலும் பரந்து வாழ்ந்த எம் மக்கள் தென்படவே, இயலுமான வேளைகளில் பல நுhறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள இப் பங்கிற்கு அவர் நேரடியாகச் சென்றோ அல்லது உதவிப் பணியாற்ற வரும் அருட்பணியாளர்களை அனுப்பியோ வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார். பணியக வளர்ச்சிப் பாதையில் மேலும் பல பங்குகள் யேர்மன் முழுவதும் நிறுவி வந்த வேளையில் 1995இல் கருங்காட்டுப் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து கருங்காட்டு தமிழ் கத்தோலிக்க பங்கு எனும் பெயரில்ல் இயக்குனர் ஜெயசேகரம் அவர்களால் புதிய பங்கொன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்பாளராக திரு. கிறகோரி மதுரநாயகம் அவர்களும் பங்குப் பணிகளுக்கான உதவியாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் சில குடும்பங்களே வழிபாடுகளில் பங்கேற்றிருந்த போதிலும், நாட்கள் செல்லச் செல்ல ஆலயம் நிறைந்த மக்களுடன் வழிபாடுகள் நடந்தேறின. முக்கியமாக தவக்கால மற்றும் நத்தார் வழிபாடுகள், பங்கு விழாக்கள் சிறப்புப் பெற்றன. தவக்கால வழிபாடுகளின்போது அந்நாட்களில் அருட்கலாநிதி ஜெயசேகரம் அவர்களின் வழிகாட்டலில் பொதுநிலையினரை உள்ளடக்கிய தியான, வழிபாட்டு இசைக்குழு பல்வேறு பங்குகளுக்கும் சென்று பாடல் பயிற்சி, தியானம், குடும்பத் தாpசிப்பு முதலியவற்றை மேற்கொள்வது வழக்கம். இக் குழுவில் இடம்பெற்றிருந்த நாம் வில்லிங்கன்-சுவேனிங்கன் பங்கையும் ஒருசில முறைகள் தரிசித்து அப்பங்கின் வளர்ச்சிக்கு உற்சாகம் கொடுத்தது இன்றும் பசுமையான நினைவுகளாகப் பதிந்துள்ளன.

ஒரு பங்குத்தளம் என்பது தனிப்பட்ட ஒருசிலருக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பொதுவானது. அத்துடன் புலம்பெயர் நாடுகளில் அதன் பொறுப்பாளர்களாக செயலாற்றுபவர்கள் எத்தனையோ சிரமங்களுக்கும் மத்தியிலும், பல விட்டுக்கொடுப்புகளுடன் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றுபவர்களில் திரு. மதுரநாயகம் அவர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் தனியாக தமது பங்கு என்பதோடு மட்டும் நின்றுவிடாது, பணியக நிர்வாகம், பாசறைகள், விழாக்கள் போன்றவைகளில் உரிய ஆலோசனைகளையும், புத்திமதிகளையும் எமக்குத் தொடர்ந்து வழங்கிவருபவர். தூரம், உடல்நலம் பாராது தொடர்பாளர்களுக்கான சந்திப்புக்கள், ஒன்றுகூடல்கள், யாத்திரைகள் அனைத்திலும் தவறாது பங்கேற்பவர். அத்துடன் கத்தோலிக்க மறை வளர்ச்சிக்கான புத்தகங்கள், ஒலிநாடாக்கள், வருட நாட்குறிப்புகள் போன்றவற்றை தென் இந்தியாவிலிருந்து தருவித்து இங்கு எம் மக்களுக்கு வழங்கி உற்சாகம் அளிப்பவர். அவரும் அவரது குடும்பமும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தமக்காக அல்லாது இறைவனுக்காக தம்மை அர்ப்பணித்து இப்பணியை தாம் யேர்மனி வந்த காலம் தொட்டும், பங்கு ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்களை நிறைவுசெய்யும் இந்நாள்வரையிலும் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக இவர்களைப் பாராட்டும் அதேவேளை தனியாகப் பொறுப்பாளர்கள் மட்டும் சிறப்பாக இயங்கினால் போதாது, அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நின்று தம் பெயரை வெளிக்காட்டாது உற்சாகமும் உறுதுணையும் வழங்கிவரும் வில்லிங்கன்-சுவேனிங்கன் பங்கு தமிழ் மக்கள் அனைவரையும் இந்த 15 வருட நிறைவு விழாவில் வாழ்க வளர்க என வாழ்த்திப் பாராட்டும் அதேவேளை எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்து பங்கு வளர்ச்சிக்கு முழு ஆதரவு கொடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் பங்கு. எல்லாப் புகழும் இறைவனுக்கே உhpத்தாகட்டும்.

நல் வாழ்த்துக்களுடன்

கமிலஸ் துரைசிங்கம்
(முன்னாள் செயலர், தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்-யேர்மனி)